வேலூர்: மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா – ப. கார்த்திகேயன் M.L.A அவர்கள் வழங்கினார் !
வேலூர்: மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
வேலூர் மாநகரம் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள K.A.K.M மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், இன்று (05.01.2026) மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ப. கார்த்திகேயன் M.L.A அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். மேலும் கல்வியின் முக்கியத்துவம், மாணவர்கள் எதிர்காலத்தில் சாதிக்க வேண்டிய இலக்குகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் 30வது மாமன்ற உறுப்பினர் திரு. V.S. முருகன், M.C, 35வது மாமன்ற உறுப்பினர் திரு. C. சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மாணவர்களின் கல்வி பயணத்தை எளிதாக்கும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த மிதிவண்டிகள், மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.